தான்யாஸ் தமிழ் நாட்டில் வளர்ந்துவரும் இயற்கை உணவு உற்பத்தி நிறுவனம் ஆகும், தைத்திங்கள் நிறுவனம் அவர்களுடன் கைகோர்த்து வர்த்தகதில் ஈடுபடுவதில் பெரும் உவகை கொள்கிறோம். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி கூட்டாக உயர்வு பெறுவதை நமது தைத்திங்கள் நிறுவனம் கொள்கையை கொண்டுள்ளது.
தான்யாஸ் இயற்கை வழி உணவு மற்றும் அழகு சாதன பொருள்களை மக்களிடையே கொண்டு சேர்த்து அதன் மூலம் பாரம்பரிய வாழ்வு முறைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் 2014 ஆம் வருடம், மதுரையில் ஒரு சிறிய கிளையாக தொடங்கப்பட்டது. பாரம்பரிய உணவு பொருட்களான சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பனைப் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட 140 க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு பொருட்களை நவீன கால தேவைக்கேற்றார் போல் மதிப்புக்கூட்டி அளிப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை வழி விவசாயிகளை ஊக்குவிக்கிறார்கள். தான்யாஸ் நிறுவனத்தின் மூலம் இயற்கை விவசாயிகளுக்கும், இயற்கை பொருட்களை நுகர்வோருக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்குவதே எங்கள் உயரிய நோக்கமாக கொண்டுள்ளார்கள்.
இதன் நிர்வாகி திரு. தினேஷ் அவர்கள், 25 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து பின் இயற்கை விஞ்ஞானி தெய்வத்திரு. நம்மாழ்வார் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மதுரையில் தான்யாஸ் என்கின்ற இயற்கை அங்காடி மற்றும் இயற்கை உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இயற்கை விவசாயத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாக, தான் பணிபுரிந்த கல்லூரியில் 3 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து மாணவர்களிடையே நல்லதொரு சிந்தனையை விதைத்து உள்ளார். மேலும் பல்வேறு கருத்தரங்குகளில் நச்சற்ற சத்தான தரமான உணவு முறைகள் பற்றிய கூடுதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
திரு. தினேஷ் அவர்கள், மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தின் இயற்கை விவசாயத் துறையின் சிறப்பு உறுப்பினராகவும் உள்ளார். மேலும் நாட்டுவிதைகளின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை விவசாயிகளிடையே கொண்டு சேர்த்துள்ளார். இதனால் பத்துக்கும் மேற்பட்ட சிறுதானிய இயற்கை விவசாயிகள் தான்யாஸ்-இல் தங்களை இணைத்துள்ளனர்.