எங்களைப்பற்றி

எங்கள் இனம் சார்ந்த ஒரு உணர்வை நாங்கள் செய்யும் தொழிலில் புகுத்திட வேண்டும் என்பது வெகுகாலமாய் நாங்கள் மனதில் கொண்ட லட்சியமாகும், அதுவே நாங்கள் கொண்ட இலக்காகவும் இருந்தது. அதுவே தற்போது “தைத்திங்கள்” என்ற அடையாளப்பெயரில் துவக்கப்பட்டுள்ளது.
தைத்திங்கள் ஆயத்த ஆடைப்பட்டறை, ஆயத்த ஆடைகளின் மூலமாக நமது கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.
இது தமிழ்ச் சமூக பண்பாட்டு அடையாளங்களின் அணிவகுப்பாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அதோடு இது மொழி மீதான காதலை தூண்டுவதாகவும் அமையும். மேலும் இது உலகத்தரம் வாய்ந்த, அழகிய கண்கவர் வடிவமைப்புக் கொண்ட தமிழ் மொழியிலான ஆயத்த ஆடைகளை உலகளாவிய நிலையில் சந்தை படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பேராதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி

திருப்பூர் மணி
தொடர்பு எண் : +91 9750903304
முகநூல்: https://www.facebook.com/thannigarillathamizhan