நீலிஅவுரிப் பொடி
மூலிகை பற்பொடி
அளவு: 50 கிராம்
மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய்
பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும்.
பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
பச்சைக் கற்பூரம்
குமரிக்கடுக்காய் லேகியம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய்
பயன்படுத்தும் முறை: இரவு படுக்கும் முன் பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும்
பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.
பனங்கிழங்கு மாவு
மூலிகை ஒத்தட முடிச்சு
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, பிரண்டை, ஊமத்தை, முருங்கை, வாத நாராயணன், முடக்கத்தான், வேலிப்பருத்தி, பூண்டு, இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, வேப்பெண்ணெய்
பயன்படுத்தும் முறை: அகன்ற மண் சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தி இந்த முடிச்சினை அதில் ஒத்தி எடுத்து ஒத்தடம் கொடுக்கவும்
பயன்கள்: உடலில் உள்ள அனைத்து வலிகள், பக்கவாதம், அடிப்பட்ட வீக்கம், இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கட்டி சாம்பிராணி
முடக்கு அறுத்தான் தைலம்
60 மில்லி குடுவை
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய்
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.
கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
100% உத்திரவாதமான மருந்து.
ஆடாதோடை பொடி
முல்தானிமெட்டி பொடி
சொரியோ சஞ்சீவி தைலம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.