தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 30 results

பேன் மருந்து

12.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

செங்கனி பேன் மருந்து

10.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

மூலிகை உறிஞ்சி

60.00
சுவாசம் சீராகும், சளி தொந்தரவு நீங்கும் நுரையீரல் சுத்தமாகும், ஒரு துளி உள்ளங்கையில் வைத்து நன்கு கையை தேய்த்து முகம் அருகே வைத்து நன்கு உறிஞ்சி சுவாசிக்க வேண்டும். 20 மில்லி
Add to cart

மூலிகை ஒத்தட முடிச்சு

150.00
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, பிரண்டை, ஊமத்தை, முருங்கை, வாத நாராயணன், முடக்கத்தான், வேலிப்பருத்தி, பூண்டு, இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, வேப்பெண்ணெய் பயன்படுத்தும் முறை: அகன்ற மண் சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தி இந்த முடிச்சினை அதில் ஒத்தி எடுத்து ஒத்தடம் கொடுக்கவும் பயன்கள்: உடலில் உள்ள அனைத்து வலிகள், பக்கவாதம், அடிப்பட்ட வீக்கம், இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Add to cart

சொரியோ சஞ்சீவி தைலம்

130.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.
Add to cart

மூலிகை கூந்தல் தைலம்

150.00
குடுவை : 100மில்லி உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள் முடி உதிர்வு நிற்கும் தலைமுடி கருமை புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும் கூந்தல் வளர்ச்சி அடையும் இளநரை மறையும்.  ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்.. 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
Add to cart

முடக்கு அறுத்தான் தைலம்

120.00
60 மில்லி குடுவை "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி" - சித்தர் பாடல்- செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய் முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது. மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 100% உத்திரவாதமான மருந்து.    
Read more

தென்னை மரக்குடி எண்ணெய்

55.00
தமிழகத்தின் மிகத் தொன்மையான வலி மருந்துகளில் தென்னை மரக்குடி எண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு, கைகால் வலி, கழுத்து வலி, போன்றவற்றிக்கு நல்ல தீர்வாகும். தீப்புண், நாற்பட்ட புண்ணிற்கும் நல்ல பலன் அளிக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். எண்ணெயை சூடு செய்து தேய்த்தால் மேலும் பலன் அளிக்கும். 30 மில்லி
Add to cart

புற்று மண் கலவை

165.00
எடை: 500 கிராம் மூலிகைகள்: புற்றுமண், வேப்பிலை சாறு, மாட்டுக்கோமியம், வெட்டிவேர், சந்தனச்சக்கை, விலாமுச்சி வேர் மற்றும் பல. பயன்படுத்தும் முறை:  தேவையான அளவு கலவையை எடுத்து நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு குளிக்கலாம் மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் நீரில் கலக்கி பூசிக் கொள்ளலாம். பயன்கள்: உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும், மூட்டுவலி, சைனஸ், தைராயிடு, மார்புச் சளி ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நல்ல தீர்வும் கிடைக்கும்.
Add to cart

மூலிகை ஆவி பிடிக்கும் பை

225.00450.00
மூல பொருட்கள்: நொச்சி, வேப்பிலை, துளசி, புதினா, தைல இலை ( யூகலிப்டஸ் ) மஞ்சள், சீரகம், ஓமம், மிளகு, சுக்கு, கிராம்பு, உப்பு. பயன்படுத்தும் முறை: மூலிகை பையை தேவையான அளவு தண்ணீரில் போட்டு மூடி கொதிக்க வைத்து ஆவி வந்த பின் ஆவி/ வேது பிடிக்கவும். பயன்கள்: தலையில் கோர்த்துள்ள நீரையும், மார்புச் சளியையும் கரைத்து வெளியே கொண்டு வந்து புத்துணர்வு அளிக்கும்.  ( வெளிப்பயன்பாடு மட்டும் ) நாள் ஒன்றுக்கு மூன்று வேளை ஆவி பிடிக்கலாம்.  சாப்பிடும் முன் பிடித்தல் நலம். எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத அசல் இயற்கையான மூலிகை ஆகும்.

திருப்பால் தோல் களிம்பு

50.00
சேற்றுப்புண், பித்தவெடிப்பு, சிராய்ப்பு, முகப்பரு, படை, படர் தாமரை போன்ற பல தோல் பிரச்சனைகளை சரி செய்யும். சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட இந்த களிம்பு அனைத்து விதமான தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவும் பொழுது பிரச்சனை சரி ஆவதோடு பழைய நிலைமைக்கு திரும்ப செய்யும், எரிச்சல் தன்மை அளிக்காது.
Add to cart

பொன்னாங்கன்னித் தைலம்

140.00
உடல் சூடு, கண் ரோகம், ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும். பொன்னாங்கன்னித் தைலத்தை வாரம் ஒருமுறை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் சென்று இளம் சூடான நீரில் குளித்து வர உடலில் மிகுதி படும் உஷ்ணம் குறைந்து கண் எரிச்சல் மறையும். 100மில்லி
Add to cart