தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
பச்சைக் கற்பூரம்
பனங்கிழங்கு மாவு
கட்டி சாம்பிராணி
ஆவாரம் பூ
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள்
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்வசம்பு
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
பூந்திக்கொட்டை
பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது. வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம்.
மருதாணி விதை
பாதாம் பிசின்
பன்னீர் பூ
இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த பூ உள்ள தண்ணிரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும்.
இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும்.
நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.
ஓமம்
ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.
வெள்ளைக் குங்கிலியம்
குங்கிலியத்தை சந்தனக்கட்டை சிறு துண்டு சேர்த்து நெருப்பில் போட்டு வைத்தால் வரும் புகை வீட்டில் இருக்கும் விஷ காற்றை சுத்தம் செய்யும். நோயாளிகளுக்கு இதன் புகை உற்சாகத்தை கொடுக்கும்.
குங்கிலியத்தூளை பொடித்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். சிறுநீர் பாதை எரிச்சல் குணமாக்க குங்கிலியம் தூளை பாலில் கலந்து குடித்து வந்தால் இது சிறுநீர் பாதை புண்களை குணப்படுத்தும். சிறுநீர் பெருக்கும்.