Showing 1–12 of 790 results

மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )

100.00
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன. நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது. உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி

43.0096.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

சிவப்பு கவுனி அரிசி

43.0085.00
சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஆஸ்துமாவை தடுக்கும் உடலில் ஆக்ஸிஜன் மேம்படும் செரிமானத்திற்கு உதவும் இதய நோயில் இருந்து பாதுகாக்கும் எடை இழப்பிற்கு உதவும் எலும்புகளுக்கு நல்லது

தூயமல்லி அரிசி

49.0098.00
தூயமல்லி பயன்கள் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து  மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

தங்க சம்பா அரிசி

49.0098.00
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும். பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும். புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும். தங்க அரிசிஎன்பது மரபணுப் பொறிமுறையின்(Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும். மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும். உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும். உடல்நிறம் (Colour complexion) கூடும். ஆண் ஆற்றல்(Potency of male)அதிகரிக்கும்.

மூலிகை கொசு விரட்டி

91.00
அளவு: 45 மில்லி அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும். கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மூலப் பொருட்கள்: வேப்பிலை,  நொச்சி, துளசி,  மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
  • 100% இயற்கையானது
  • இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
  • ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
  • கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
  • இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த கொசு விரட்டிகள் 100 சிகரட் குடிப்பதற்கு சமமான நச்சு புகையை சுவாசிக்க செய்கிறது.
Read more

மண் கட்டிய துவரம் பருப்பு

113.00225.00
  • மண் கட்டிய துவரம் பருப்பு : துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும். மண்கட்டும் வேளாண் நுட்பம் : இந்த மண்கட்டுதல் என்பது மிகவும் தொண்மையான வேளாண் நுட்பம், இதற்கு மற்றொரு பெயரும் உண்டு செம்மல் கட்டுதல்.. இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,. இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும் அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும் பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும் உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை அளிக்கும்.

ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி

44.0088.00
தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட அரிசி ஆத்தூர் கிச்சலி சம்பா

கருப்பு கவுனி அரிசி

105.00210.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

காட்டுயானம் அரிசி

49.0098.00
  • காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை  மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது தனித்துவம் (Speciality): காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய  நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
    • நீரிழிவு நோய்க்கும்(Diabetes) நல்ல பலன் அளிக்கக்கூடியது
    • புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.
    • ஆண்டி ஆக்சிடன்ட்(Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.
    • பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.
    • விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
    • பசியைத் தாமதப்படுத்தும்.
    • இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை(Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.
    நன்றி. நம்மாழ்வார் ஐயா

பசுஞ்சாண மூலிகை கிண்ண சாம்பிராணி

65.00
நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது இயற்கை மூலிகை தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது .

33 வகை சிறுதானியங்கள் அடங்கிய சத்துமாவு

225.00450.00

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் 33 வகை சிறுதானியங்கள், பயிர் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவற்றை வறுத்து பின்னர் மாவாக அரைக்கப் பட்டது.

நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.

இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும்.

தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.

  • வரகு 
  • சாமை 
  • குதிரைவாலி 
  • திணை 
  • நரிப்பயிறு
  • நாட்டுக்கொள்ளு 
  • பனிவரகு 
  • பூங்கார் அரிசி 
  • காட்டுயானம் அரிசி 
  • மாப்பிள்ளைசம்பா அரிசி 
  • மூங்கில் அரிசி 
  • கருங்குறுவை அரிசி 
  • நிலக்கடலை 
  • பார்லி 
  • சோயா 
  • பச்சைப்பட்டாணி 
  • சிவப்பு அவல் 
  • பொட்டுக்கடலை 
  • மைசூர் பருப்பு 
  • கேழ்வரகு 
  • கருப்பு உளுந்து 
  • நாட்டுப் பச்சைப்பயிறு 
  • வெள்ளை சோளம் 
  • கம்பு 
  • சவ்வரிசி 
  • சம்பா கோதுமை 
  • நாட்டுத் தட்டைப்பயிறு 
  • சோளம் 
  • கிட்னி பீன்ஸ் 
  • சுக்கு
  • ஏலக்காய்
  • முந்திரி
  • பாதாம்