மாப்பிள்ளை சம்பா அரிசி
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது.
நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.
மண் கட்டிய துவரம் பருப்பு
- மண் கட்டிய துவரம் பருப்பு : துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும். மண்கட்டும் வேளாண் நுட்பம் : இந்த மண்கட்டுதல் என்பது மிகவும் தொண்மையான வேளாண் நுட்பம், இதற்கு மற்றொரு பெயரும் உண்டு செம்மல் கட்டுதல்.. இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,. இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும் அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும் பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும் உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை அளிக்கும்.
சிவப்பு கவுனி அரிசி
சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
ஆஸ்துமாவை தடுக்கும்
உடலில் ஆக்ஸிஜன் மேம்படும்
செரிமானத்திற்கு உதவும்
இதய நோயில் இருந்து பாதுகாக்கும்
எடை இழப்பிற்கு உதவும்
எலும்புகளுக்கு நல்லது
சீரக சம்பா அரிசி
- சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம்(Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனித்துவம் (Speciality): “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும். இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani)செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது. சீரகச் சம்பா பயன்கள்(Benefits): எளிதாக செரிப்பதோடு(Easily Digestable), இரைப்பை(Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது. வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும். குடல்புண்(Ulcer), வயிற்றுப்புண்(Severe),வாய்ப்புண்(Mouth ulcer) குணமாகும். கண் நரம்புகளுக்கு(Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை(Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
தூயமல்லி அரிசி
தூயமல்லி பயன்கள்
மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது.
இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது.
அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது,
பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்
இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி
மக்காச்சோள ரவை
வல்லாரை முறுக்கு
எடை: 160 கிராம்
அரிசி மாவு, உளுந்து மாவு, எள்ளு, வல்லாரை கீரை கொண்டு கலப்படம் இல்லாமல் செய்யப்பட்டது.
வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரை கீரை’ எனப் பெயர் பெற்றது. வல்லாரை கீரையானது சரசுவதிக் கீரை எனவும் அழைக்கபடுகிறது. மனித மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
காட்டுயானம் அரிசி
- காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது
தனித்துவம் (Speciality): காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.
காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
- நீரிழிவு நோய்க்கும்(Diabetes) நல்ல பலன் அளிக்கக்கூடியது
- புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.
- ஆண்டி ஆக்சிடன்ட்(Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.
- பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.
- விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
- பசியைத் தாமதப்படுத்தும்.
- இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை(Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.
நிலக்கடலை இனிப்பு உருண்டை
எண்ணிக்கை: 5 உருண்டைகள்
நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது.
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது..
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.