Showing 1–12 of 38 results

மக்காச்சோள ரவை

45.0090.00
அதிக ஊட்டச்சத்து நிறைந்தது மக்காச்சோள ரவை. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் உண்ணலாம், உப்புமா கஞ்சி என பல விதமாக உண்ணலாம்.

நாட்டுக் கொள்ளு

60.00120.00
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
முழுப் பயன்களும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

இந்து பொடி உப்பு

45.0090.00
இந்து பொடி உப்பு நன்மைகள் : * இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். * மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது. * இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். * எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது.

புழுங்கல் அரிசி வடகம்

175.00350.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே வற்றல் தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: புழுங்கல் அரிசி, வர மிளகாய், சோம்பு, பெருங்காயம், பூண்டு, உப்பு 

குதிரைவாலி

90.00180.00
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டு மல்லி

140.00280.00
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது 00 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது. மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

மாங்காய் வத்தல்

60.00150.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மாங்காய் வத்தல் தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: முற்றிய மாங்காய், மஞ்சள்தூள், உப்பு   மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

மருந்து குழம்பு கலவைப்பொடி

100.00250.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மருந்து குழம்பு தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: அதிமதுரம், திப்பிலி, கண்ட திப்பிலி, சதகுப்பை, பட்டை, பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்  மருந்து குழம்பு மனிதர்களுக்கு ஓர் மகத்துவமான மருந்தாகும், உணவே மருந்து எனும் கூற்றுப்படி இம்மருந்து குழம்பு தலைசிறந்த ரோக நிவாரணி ஆகும்.  மருந்துகுழம்பு உடம்பில் இருக்கும் சளி மற்றும் நீர்க்கட்டை குணப்படுத்தும், வயிற்று வலி செரிமானமின்மை போக்கி ஆரோக்கியம் தரும் மேலும் உடம்பு வலிகளை நீக்கி புத்துணர்வை தரும். 

கருப்பு முழு உளுந்து

88.00175.00
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது. மேலும் பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

கருப்பட்டி

225.00450.00
கருப்பட்டியில் மருத்துவ குணங்கள் கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.

மஞ்சள் தூள்

195.00390.00
இயற்கை முறையில் விளைந்த மஞ்சளை கல் அரவையில் தயாரித்த மஞ்சள் தூள். முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கை கல் அரவையில் அரைத்து நேரடி கண்காணிப்பில் தருகிறோம். இந்த மஞ்சள் தூளை சமையல், கிருமி நாசினி என பலவகைக்கு பயன்படுத்தலாம்.

கருவடகம்

275.00550.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே கருவடகம்  தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: மஞ்சள், சோம்பு, சீரகம், வெந்தயம், கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பில்லை, விளக்கெண்ணெய்.  பலவிதமான உணவுகளுக்கு தாளிப்புக்கு கருவடகம் பயன்பாடும், துவையல் அரைத்தும் சாப்பிடலாம்.