Showing 1–12 of 50 results

மண் கட்டிய துவரம் பருப்பு

113.00225.00
  • மண் கட்டிய துவரம் பருப்பு : துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும். மண்கட்டும் வேளாண் நுட்பம் : இந்த மண்கட்டுதல் என்பது மிகவும் தொண்மையான வேளாண் நுட்பம், இதற்கு மற்றொரு பெயரும் உண்டு செம்மல் கட்டுதல்.. இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,. இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும் அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும் பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும் உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை அளிக்கும்.

33 வகை சிறுதானியங்கள் அடங்கிய சத்துமாவு

225.00450.00

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் 33 வகை சிறுதானியங்கள், பயிர் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவற்றை வறுத்து பின்னர் மாவாக அரைக்கப் பட்டது.

நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.

இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும்.

தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.

  • வரகு 
  • சாமை 
  • குதிரைவாலி 
  • திணை 
  • நரிப்பயிறு
  • நாட்டுக்கொள்ளு 
  • பனிவரகு 
  • பூங்கார் அரிசி 
  • காட்டுயானம் அரிசி 
  • மாப்பிள்ளைசம்பா அரிசி 
  • மூங்கில் அரிசி 
  • கருங்குறுவை அரிசி 
  • நிலக்கடலை 
  • பார்லி 
  • சோயா 
  • பச்சைப்பட்டாணி 
  • சிவப்பு அவல் 
  • பொட்டுக்கடலை 
  • மைசூர் பருப்பு 
  • கேழ்வரகு 
  • கருப்பு உளுந்து 
  • நாட்டுப் பச்சைப்பயிறு 
  • வெள்ளை சோளம் 
  • கம்பு 
  • சவ்வரிசி 
  • சம்பா கோதுமை 
  • நாட்டுத் தட்டைப்பயிறு 
  • சோளம் 
  • கிட்னி பீன்ஸ் 
  • சுக்கு
  • ஏலக்காய்
  • முந்திரி
  • பாதாம் 

மக்காச்சோள ரவை

45.0090.00
அதிக ஊட்டச்சத்து நிறைந்தது மக்காச்சோள ரவை. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் உண்ணலாம், உப்புமா கஞ்சி என பல விதமாக உண்ணலாம்.

நாட்டுக் கொள்ளு

60.00120.00
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
முழுப் பயன்களும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

வரகு அரிசி

60.00118.00
வரகு அரிசி உண்பதால் ஏற்படும் பலன்கள் சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

சத்துமாவு சிறுதானிய தொகுப்பு பை – 33 வகை தானியங்கள்

799.00
உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் சிறுதானியங்களை ஒன்று படுத்தி ஒரு தொகுப்பாக வாடிக்கையாளருக்கு அளிக்கிறோம். இத்தானியங்களை முளைக்கட்டி அல்லது வறுத்து பின்னர்  மாவாக அரைத்து குடும்பத்தினர் அனைவரும் பருகலாம். இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும். ஒரு தொகுப்பு 3 ( மூன்று ) கிலோ தானியங்கள் அடங்கியது. தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.
    1. வரகு 100 கிராம்
    2. சாமை 100 கிராம்
    3. குதிரைவாலி 100 கிராம்
    4. திணை 100 கிராம்
    5. நரிப்பயிறு 100 கிராம்
    6. நாட்டுக்கொள்ளு 100 கிராம்
    7. பனிவரகு 100கிராம்
    8. பூங்கார் அரிசி 100 கிராம்
    9. காட்டுயானம் அரிசி  100 கிராம்
    10. மாப்பிள்ளைசம்பா அரிசி  100 கிராம்
    11. மூங்கில் அரிசி 100கிராம்
    12. கருங்குறுவை அரிசி  100 கிராம்
    13. நிலக்கடலை 100 கிராம்
    14. பார்லி 100 கிராம்
    15. சோயா 100 கிராம்
    16. பச்சைப்பட்டாணி 100 கிராம்
    17. சிவப்பு அவல் 100 கிராம்
    18. பொட்டுக்கடலை 100 கிராம்
    19. மைசூர் பருப்பு 100 கிராம்
    20. கேழ்வரகு 100 கிராம்
    21. கருப்பு உளுந்து 100 கிராம்
    22. நாட்டுப் பச்சைப்பயிறு 100 கிராம்
    23. வெள்ளை சோளம் 100 கிராம்
    24. கம்பு 100 கிராம்
    25. சவ்வரிசி 100 கிராம்
    26. சம்பா கோதுமை 100 கிராம்
    27. நாட்டுத் தட்டைப்பயிறு 100 கிராம்
    28. சோளம் 100 கிராம்
    29. கிட்னி பீன்ஸ் 100 கிராம்
    30. சுக்கு
    31. ஏலக்காய்
    32. முந்திரி
    33. பாதாம் - நான்கும் சேர்த்து 100 கிராம்
Add to cart

பச்சை நிலக்கடலை

92.00180.00
பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து. பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது. ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும். ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். வயிற்றில் நிகோடினிக் அமிலம் குறையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள நையாசின் இந்நிலையைச் சீர்செய்கிறது. புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும். வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

குதிரைவாலி

90.00180.00
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தினை அரிசி

60.00120.00
தினை உண்பதால் ஏற்படும் பலன்கள் எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது. விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது. உடலை வலுவாக்கும் சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

நாட்டு மல்லி

140.00280.00
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது 00 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது. மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

வடைப் பருப்பு

72.00140.00
வடைப் பருப்பு என்பது  கடலை பருப்பு போல் உள்ள ஒரு பருப்பு. கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இப்போது சென்னையிலும்  கிடைக்கிறது. இந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து இத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், லவங்கம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக  அரைக்கவும்.  இத்துடன் மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த  வடைப் பருப்பு வடை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

வெள்ளை மொச்சை

75.00150.00
வெள்ளை மொச்சை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும் தன்மை வாய்ந்தது. வெள்ளை மொச்சை பயன்கள் இவற்றில் புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றது மற்றும் இரும்புச் சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி, நார்சத்து ஒரளவு இருக்கிறது. சிலருக்கு மொச்சை பயிர் சாப்பிட்டால், வாயுப் பிரச்சனைகளை உண்டாக்கி விடும், ஆகையால் அந்த பிரச்சனைகள் உள்ளவர் மொச்சை பயிர் சாப்பிட வேண்டம். வெள்ளை மொச்சை பயன்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.