நிலக்கடலை இனிப்பு உருண்டை
எண்ணிக்கை: 5 உருண்டைகள்
நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது.
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது..
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
வல்லாரை முறுக்கு
எடை: 160 கிராம்
அரிசி மாவு, உளுந்து மாவு, எள்ளு, வல்லாரை கீரை கொண்டு கலப்படம் இல்லாமல் செய்யப்பட்டது.
வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரை கீரை’ எனப் பெயர் பெற்றது. வல்லாரை கீரையானது சரசுவதிக் கீரை எனவும் அழைக்கபடுகிறது. மனித மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
தேங்காய்பால் முறுக்கு
எடை: 160 கிராம்
அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை, தேங்காய் பால், வெள்ளை எள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது
தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
உலர் பழ இனிப்பு உருண்டை
எண்ணிக்கை: 5 உருண்டைகள்
பேரீச்சம் பழம், பல பழ வகைகள், தேங்காய் துருவல் கொண்டு உருண்டை தயார் செய்யப்படுகிறது.
சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன, துருவிய தேங்காய் அதிக எண்ணெய் சத்து கொண்டதுடன் புரத சத்து நிறைந்தது, பல பழவகைகள் இயற்கையான இனிப்பு மிகுந்ததாகவும் வண்ணாமூட்டியாகவும் செயல்படுகிறது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
இனிப்பு எள்ளுருண்டை
எண்ணிக்கை: 5 உருண்டைகள்
எள்ளு , நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது.
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து சாப்பிடுவது மூலம் போக்க முடியும்.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
கேரட் முறுக்கு
எடை: 160 கிராம்
அரிசி மாவு, உளுந்து மாவு, எள்ளு, கேரட் கொண்டு கலப்படம் இல்லாமல் செய்யப்பட்டது.
கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.