மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன.
நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது.
உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.
மூலிகை பற்பொடி
அளவு: 50 கிராம்
மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய்
பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும்.
பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
செம்பருத்தி பூ வழலைக்கட்டி
பப்பாளி வழலைக்கட்டி
கற்றாழை வழலைக்கட்டி
பீர்க்கங்காய் நார்
பீர்க்கங்காய் நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.
பாதங்களை பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் பித்த வெடிப்பு நீங்கி பாதம் மென்மையடையும்.
மூலிகை மலர்பானம்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவாரம்பூ, செம்பருத்திபூ, ரோஜா, வெண் தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நன்னாரி, அதிமதுரம், கொத்தமல்லி
பயன்படுத்தும் முறை: இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி மலர் பானம் பொடியை கலந்து அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீராக சுண்ட வைத்து வடித்து வெறும் வயிற்றில் அதிகாலையில் மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்த அடைப்பு, மூச்சு திணறல், சைனஸ், நாள்பட்ட சளி, தோல் சம்பந்தமான வியாதிகள், மலச்சிக்கல், பைலஸ், கர்ப்பபை சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.