மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன.
நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது.
உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.
மூலிகை கூந்தல் தைலம்
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் மூலிகை கலவை
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
செம்பருத்தி சாம்பூ – Hibiscus Shampoo
Arappu Shampoo
வெட்டிவேர் சாம்பூ – Vetiver Shampoo
வெள்ளரி -கற்றாழை திண்மக்கரைசல் – Cucumber aloe vera gel
மூலப்பொருட்கள்: காற்றாலை சோறு, வெள்ளரி, தண்ணீர், வாசனை பொருட்கள்
உபயோகிக்கும் முறை: சிறிதளவு கையில் தண்ணீர் ஊற்றி குழைத்து தலையில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசவும்
பலன்கள்: தலை முடி, முகம், சருமம் முழுவதும் தடவிக் கொள்வதன் மூலம் நல்ல பொலிவு ஏற்படுகிறது. மேலும் இளமையான தோற்றத்தை அளிக்கும், வெயிலில் இருந்து பாதுகாக்கும்.
இரசாயன கலப்பில்லாமல் தயாரிக்கப்பட்டது.
100 கிராம்
ஆண்கள் முக அழகு பூச்சு
உட்பொருள்: நன்னாரி, வெட்டிவேர், விளாமிச்சி வேர், நாட்டு ரோசா, மரிக்கொழுந்து, சந்தனம், மகிழம்பூ, கார்போக அரிசி, எலுமிச்சை தோல்
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலசவும்.
பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
gents face pack