சந்தன அத்தர்
3 மில்லி
ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை.
சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும். ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.
சவ்வாது அத்தர்
3 மில்லி
ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை.
சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும். ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.
சுரை குடுவை
நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் இச்சுரை குடுவை
நம் பாரம்பரிய சேமிப்பு பெட்டகத்தில் ஓர் அற்புத பொருளாகும். பொருட்கள் நீண்ட நாள்
கெடாமல் இருக்க பயன்படும் சுரை குடுவை இயற்கை நமக்களித்த ஓர் வரபிரசாதம்.
இயற்கை தண்ணீர் குடுவை, இயற்கையான Water jacket, தேன் பல வருடங்களுக்கு புளிப்பு ஏறாமல்
கெடாமல் இருக்கும், விபூதி நறுமணம் குறியாயமல் நமத்து போகாமல் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும்,
சித்த வைத்தியர்கள் தயாரிக்கும் பசுபம், சூரணம் பல வருடங்களுக்கு வீரியம் குறையாமல் இருக்கும். இயற்கையான
பாதுக்காப்பு உபகரணமாக இருக்கும் சுரை குடுவை இயற்கை பேரிடர் வெள்ளம் வரும் பொழுது குடுவையை பிடித்து கொண்டு தப்பலாம்.
கருங்காலி தோசைக்கல் பிடி
கருங்காலி தோசைக்கல் பிடியில் துணியை கட்டி எண்ணெய் தொட்டு தோசை ஊற்றும் பொழுது கருங்காலி மரத்தின் மருத்துவ நலன்கள் நம் உடலை வந்து சேரும்.
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன்படுத்தப் படுகிறது,
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பனை முறம்
அகலம்: 16 அங்குலம்
நீளம்: 19 அங்குலம்
தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை புடைத்து அதில் உள்ள கல் தூசிகளை நீக்கி உணவுக்கு பயன்படுத்துவர்
தற்காலத்தில் நாம் நாம் வாங்கும் பொருட்கள் நெகிழியில் அடைத்து அதை நாம் பரிசோதிக்காமல் அப்படியே உண்பதாலாயே நாம் இவ்வளவு நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கிறோம். அந்நிலை மாற வேண்டும்.
முறம் வாங்கியபின் சாணம் அல்லது மஞ்சள் கொண்டு மொழுகி கொள்ளுதல் நீண்ட பயன்பாட்டிற்கு வரும் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும்.
கருங்காலி மத்து
கருங்காலி மத்து கொண்டு கீரை, பருப்பு, தயிர் கடைவது, குழந்தைகளுக்கு சோறூட்ட சோறு கடைவது போன்றவற்றிக்கு பயன்படும், கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மத்தை பயன்படுத்துவதால் அமமரத்தின் மருத்துவ நலன்கள் நம் உடலை வந்து சேரும்.
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன்படுத்தப் படுகிறது,
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பனை ஓலை விசிறி
அகலம்: 8 அங்குலம்
நீளம்: 8 அங்குலம்
உயரம்: 16.5 அங்குலம்
பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும்
நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும்.
உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
பந்தி ஜமுக்காளம் 20X20
அளவு: 20X20
பவானி ஜமுக்காளம் - Bhavani Jamakkalam
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.
பனை முறம் ( சதுர வடிவம் )
சுற்றளவு: 15 அங்குலம்
தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும்,
உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.
வெட்டிவேர் தலையணை – 1
வெட்டிவேர் தலையணை
பனை ஓலை செவ்வகப் பெட்டி
அகலம்: 4.5 அங்குலம்
நீளம்: 7 அங்குலம்
உயரம்: 3.5 அங்குலம்
பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும்
அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும்.
இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும்.
உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.