Showing 1–12 of 64 results

மாப்பிள்ளை சம்பா அரிசி

770.001,925.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

கருப்பு கவுனி அரிசி

1,550.003,875.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

சீரக சம்பா அரிசி

1,100.002,750.00
  • சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் :  சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்  ரகங்களில் ஒன்றாகும்.  சீரகம்(Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.  தனித்துவம் (Speciality): “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும்.  இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani)செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது. சீரகச் சம்பா பயன்கள்(Benefits): எளிதாக செரிப்பதோடு(Easily Digestable), இரைப்பை(Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது. வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும். குடல்புண்(Ulcer), வயிற்றுப்புண்(Severe),வாய்ப்புண்(Mouth ulcer) குணமாகும். கண் நரம்புகளுக்கு(Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை(Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

வெள்ளை சோளம்

400.00800.00
வெள்ளை சோளத்தின் மருத்துவ பயன்கள்: வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வெள்ளை மொச்சை

700.001,400.00
வெள்ளை மொச்சை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும் தன்மை வாய்ந்தது. வெள்ளை மொச்சை பயன்கள் இவற்றில் புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றது மற்றும் இரும்புச் சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி, நார்சத்து ஒரளவு இருக்கிறது. சிலருக்கு மொச்சை பயிர் சாப்பிட்டால், வாயுப் பிரச்சனைகளை உண்டாக்கி விடும், ஆகையால் அந்த பிரச்சனைகள் உள்ளவர் மொச்சை பயிர் சாப்பிட வேண்டம். வெள்ளை மொச்சை பயன்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.

காலாநமக் அரிசி

950.002,375.00
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அரிசி காலாநமக் அரிசி, புத்தர் விரும்பி உணவாக ஏற்றுக் கொண்ட அரிசியாகும். இன்றளவும் புத்தக பிட்சுகள் காலாநமக் அரிசியை உணவிற்கு பயன்படுத்துகின்றனர். இரும்புச் சத்துக்கள் ஜிங்க் சத்துக்கள் நிறைந்த அரிசி இந்த சத்து குறைபாட்டினால் வரும் பல உடல் நோய்க்கு சிறந்த அரிசி புரதச் சத்துக்கள் அதிகம் கொண்டது கல்லீரலை பலப்படுத்தும் அரிசி நார்ச்சத்து நிறைந்தது உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும், இந்திய அரசால் புவியியல் குறியீடு பெறப்பட்ட பெருமை வாய்ந்த பாரம்பரிய அரிசி அஜீரணம் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும் அரிசி சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் அரிசி, வைட்டமின் குறைபாடுகளுக்கு சிறந்த அரிசி மூளை நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவும் புற்றுநோய் காரணிகளை அழிக்கும், தோல் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கும் பலவிதமான உடல் உபாதைகளுக்கும் சிறந்த அற்புதமான அரிசி, இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் முதுமையிலும் இளமையாக இருக்க துணை நிற்கும் சிறந்த அரிசி மொத்தத்தில் ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி

ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி

620.001,550.00
தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட அரிசி ஆத்தூர் கிச்சலி சம்பா

கட்ட சம்பா அரிசி

820.002,050.00
கட்ட சம்பா அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வரவிருக்கும் நோய்கள் கூட பாய்ந்தோடும்.

தங்க சம்பா அரிசி

840.002,100.00
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும். பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும். புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும். தங்க அரிசிஎன்பது மரபணுப் பொறிமுறையின்(Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும். மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும். உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும். உடல்நிறம் (Colour complexion) கூடும். ஆண் ஆற்றல்(Potency of male)அதிகரிக்கும்.

சேலம் சன்னா அரிசி

850.002,125.00
சேலம் சன்னா அரிசி நன்மைகள் : * கர்பக்காலத்தில் உண்ண வேண்டிய அரிசி . * குழந்தை பேரு நல்ல முறையில் நடைபெற உதவும் . * தசை உறுதி ஆகும். * நரம்பு வலுப்படும். * உடம்புச் சூடு குறையும். * நீரிழிவு நோய் குணமாகும். * மூட்டு வலி குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

நாட்டுப் பச்சைபயிறு

625.001,250.00
பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக  சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். முளை கட்டிய பயிராகவும், கடைந்த பருப்பாகவும், பாயசமாகவும் பச்சைப் பயிரை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

தட்டை பயிறு

625.001,250.00
நாட்டுப் பயிறு சுவையிலும் மணத்திலும் வளமையாக உள்ளதோடு மட்டுமல்லாது, தட்டை பயறுகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் இந்த கருப்பு நிற கண்களை கொண்ட பயறுகளில் கலோரிகளும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்கும் டையட் திட்டத்தில் சேர்ப்பதற்கான சிறந்த உணவாக இது விளங்குகிறது. தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு காரணம் இதனை உட்கொள்ளும் போது, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கும். மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது