Showing 1–12 of 24 results

மாப்பிள்ளை சம்பா அரிசி

43.0096.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

தூயமல்லி அரிசி

49.0098.00
தூயமல்லி பயன்கள் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து  மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி

105.00210.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

சொர்ணமசூரி அரிசி

59.00107.00
அதீதமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் அரிசிக் கஞ்சியில், பித்தம், வாயு போன்ற உபாதைகளுக்கு தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் இந்த அரிசி தருவதாக உள்ளது

கருங்குருவை அரிசி

49.0098.00
கருங்குறுவை மாமருந்து. பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

வரகு அரிசி

60.00118.00
வரகு அரிசி உண்பதால் ஏற்படும் பலன்கள் சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

தினை அரிசி

60.00120.00
தினை உண்பதால் ஏற்படும் பலன்கள் எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது. விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது. உடலை வலுவாக்கும் சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

நாட்டுக் கம்பு

40.0080.00
நாட்டுக் கம்பு உண்பதால் ஏற்படும் பலன்கள் அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. * கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். * உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். * கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். * உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

வெள்ளை சோளம்

45.0090.00
வெள்ளை சோளத்தின் மருத்துவ பயன்கள்: வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

சாமை அரிசி

72.00140.00
சாமை உண்பதால் ஏற்படும் பலன்கள் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை  நீக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. ஆண்களின்ஆண் இனபெருக்க அணு  உற்பத்திக்கும்,  ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். சாமை அரிசிக்குத் தாகசுரம், பிரமேகம், மகாவாதநோய், சோபாரோகம் இவை நீங்கும். தேகபுஷ்டி உண்டாகும்.

செஞ்சோளம் ( தோல் அகற்றியது )

75.00150.00
தோல் அகற்றி குருணை நீக்கப்பட்டது. சிவப்பு சோளத்தின் மருத்துவப் பயன்கள் சிவப்பு சோளம் இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும். கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது. சோளம் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை ஆகும்.

செஞ்சோளம்

52.00100.00
சிவப்பு சோளத்தின் மருத்துவப் பயன்கள் சிவப்பு சோளம் இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும். கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது. சோளம் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை ஆகும்.