Showing 1–12 of 37 results

மூலிகை பற்பொடி

50.00
அளவு: 50 கிராம் மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய் பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும். பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
Add to cart

மூலிகை ஒத்தட முடிச்சு

150.00
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, பிரண்டை, ஊமத்தை, முருங்கை, வாத நாராயணன், முடக்கத்தான், வேலிப்பருத்தி, பூண்டு, இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, வேப்பெண்ணெய் பயன்படுத்தும் முறை: அகன்ற மண் சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தி இந்த முடிச்சினை அதில் ஒத்தி எடுத்து ஒத்தடம் கொடுக்கவும் பயன்கள்: உடலில் உள்ள அனைத்து வலிகள், பக்கவாதம், அடிப்பட்ட வீக்கம், இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Add to cart

முடக்கு அறுத்தான் தைலம்

120.00
60 மில்லி குடுவை "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி" - சித்தர் பாடல்- செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய் முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது. மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 100% உத்திரவாதமான மருந்து.    
Add to cart

மூலிகை மலர்பானம்

120.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: ஆவாரம்பூ, செம்பருத்திபூ, ரோஜா, வெண் தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நன்னாரி, அதிமதுரம், கொத்தமல்லி பயன்படுத்தும் முறை:  இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி மலர் பானம் பொடியை கலந்து அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீராக சுண்ட வைத்து வடித்து வெறும் வயிற்றில் அதிகாலையில் மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம். பயன்கள்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்த அடைப்பு, மூச்சு திணறல், சைனஸ், நாள்பட்ட சளி, தோல் சம்பந்தமான வியாதிகள், மலச்சிக்கல், பைலஸ், கர்ப்பபை சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.
Add to cart

சொரியோ சஞ்சீவி தைலம்

130.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.
Add to cart

குமரிக்கடுக்காய் லேகியம்

120.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய் பயன்படுத்தும் முறை:  இரவு படுக்கும் முன்  பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும் பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.
Add to cart

நெல்லி சுப்பாரி

100.00
அளவு: 10 மூலிகைகள்: நெல்லிக்காய், இஞ்சி, சீரகம், இந்துப்பு பயன்படுத்தும் முறைகள்: இதனை பாக்குப்போல வாயில் போட்டு உமிழ் நீருடன் கலந்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், பசி மந்தம், உடல் சோர்வு, ரத்தசோகை, போன்றவற்றை குறைக்கிறது, போதை பாக்குகள், பீடி, சிகரெட், போன்றவற்றிலிருந்து வெளிவர பயன்படுகிறது.
Read more

குழந்தைகள் நழுங்கு மாவு

110.00
அளவு: 200 கிராம் மூலிகைகள்: கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, பாசிப்பயிறு, வெந்தயம், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, நன்னாரி, வெட்டிவேர், வசம்பு பயன்படுத்தும் முறைகள்: இதனை குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை தண்ணீரில் கலந்து தேய்த்து குளிக்க வைக்கலாம். பயன்கள்: உடல் வறட்சியாகாமல் பாதுகாக்கிறது. எந்த ரசாயனமும் இல்லாததால் தோல் சம்பந்தமான எந்த பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.
Add to cart

புற்று மண் கலவை

165.00
எடை: 500 கிராம் மூலிகைகள்: புற்றுமண், வேப்பிலை சாறு, மாட்டுக்கோமியம், வெட்டிவேர், சந்தனச்சக்கை, விலாமுச்சி வேர் மற்றும் பல. பயன்படுத்தும் முறை:  தேவையான அளவு கலவையை எடுத்து நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு குளிக்கலாம் மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் நீரில் கலக்கி பூசிக் கொள்ளலாம். பயன்கள்: உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும், மூட்டுவலி, சைனஸ், தைராயிடு, மார்புச் சளி ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நல்ல தீர்வும் கிடைக்கும்.
Add to cart

வில்வ பழச்சாறு 

180.00
அளவு: 500 மில்லி மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு உட்கொள்ளும் முறை:   50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும். பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
Read more

குமரிக்கடுக்காய் பானம் 

180.00
அளவு: 500 மில்லி மூலிகைகள்: கற்றாழை, கடுக்காய், நாட்டுச் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பயன்படுத்தும் முறை: 50மில்லி குமரிக்கடுக்காய் பானத்துடன் 100மில்லி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும். பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல்வியாதி, பெண்களின் வெள்ளைப்படுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
Add to cart

வலி வாத தைலம்

130.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: முருங்கை, வாத நாராயணன், நொச்சி, தழுதாலை, வேலிப்பருத்தி, ஊமத்தை, பிரண்டை, விராலி, நல்லெண்ணெய், புங்கெண்ணெய், கடுகெண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி பயன்படுத்தும் முறை: வலி தைலத்தை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி உடலில் எந்த பகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தேய்த்துவிடவும். பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் உள்ளவர்கள் வலித்த இடத்தில் சூடுபடுத்தி தேய்த்து அரைமணி நேரம் விட்டு மூலிகை ஒத்தட முடிச்சை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கவும். பயன்கள்: கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, இடுப்புவலி, பக்கவாதம், குதிங்கால் வலி, இரத்தக்கட்டு, மணிக்கட்டு வலி, நரம்புவலி பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாள்பட்ட எலும்பு, நரம்பு பாதிப்புகளுக்கு நல்ல பலன் கொடுக்கும், எண்ணெய் குளியலுக்கு மிகச்சிறந்தது.
Add to cart