வளர்ப்பு குருவி, மைனாக்கள், கோழி போன்ற பறவைகளுக்கு சிறுதானியத்தில் வரகு மிகப்பிடித்த உணவாகும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்…
தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.
அதனால், அவைகள் சிறுதானியங்களைதான் உண்ண முடியும்.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்
Reviews
There are no reviews yet.