ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: தைத்திங்கள் கலைக்கூடம்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
உலகின் மூத்த மொழியான தமிழின் முதல் எழுத்து ‘அ’ – எண்ணியல் படம்
அவவெழுத்தை பற்றி தாயுமானவர் சுவாமிகளின் விளக்கம் கீழே
. “”அகரஉயிர் எழுத்து அனைத்து மாகி வேறாய்
அமர்ந்ததுஎன அகிலாண்டம் அனைத்துமாகிப்
பகர்வன எல்லாமாகி அல்லவாகிப்
பரமாகி சொல்லரிய பான்மையாகித்
துகளறுசங் கற்பவிகற் பங்கள் எல்லாம்
தோயாத அறிவாகிச் சுத்தமாகி
நிகரில்பசு பதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்”
(பொருள் வணக்கம். பா-13)
என்பது தாயுமானவர் சுவாமியின் பாடல். “”அகரம் என்று சொல்லக்கூடிய உயிரெழுத்து அனைத்து எழுத்துகளுக்கும் தானாகி, (அவைகளுக்கு) வேறாகவும் (அப்பாலாய்) பொருந்தி இருத்தல் போல, அண்ட சராசரங்கள் அனைத்தும் தானேயாகி, சொல்லக்கூடிய பொருள்கள் யாவுமாகி, அதற்கு வேறாகவும் ஆகி, எல்லாப் பொருள்களுக்கும் மேலான பொருளாகி, எடுத்துக் கூறுவதற்கு முடியாத தன்மையாகி, குற்றமற்ற திடச்சித்தங்கள் மற்றும் மாறுபட்ட சித்தங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தாத அறிவாகி (ஞானமாகி), பரிசுத்தத் தன்மையாகி, எவற்றிற்கும் நிகரில்லாத ஜீவர்களுக்குத் தலைவனாகிய
(இறைவனாகிய) வஸ்துவை (பரம்பொருளை) நெருங்கிப் பெருமூச்சு விட்டு, பேரன்பு கொண்டு (நாம்) தியானம் செய்வோம்” என்கிறார் தாயுமானவர்.
“அ’ என்னும் தொனி உள்ளிருந்து உண்டாகும் நாதத்துடன் கலந்திருக்கிறது. நாதத்தைக் கண்டுபிடிப்பதே யோகம் எனப்படும். நாதமானது மற்ற உயிரெழுத்துகளுடன் கலந்து அவற்றுக்கு அப்பாலும் உள்ளது என்பதை சுவாமிகள், “”அகரவுயி ரெழுத்துமாகி வேறாய் அமர்ந்தது என” என்கிறார்.
Reviews
There are no reviews yet.