குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் – பெ. தூரன்
பக்கம்: 88
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். ‘வளர விடுக’, ‘பேச்சும் பாட்டும்’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘எண்ணித் துணியும் பேராற்றல்’,’பயப்படுத்தலாமா?’, ‘குழந்தை சித்திரம்’, ‘அறிவிலே ஆசை’ ஆகிய அத்தியாயங்கள் அத்தனை அற்புதம். தமிழில் – இத்தனை புரட்சிகரமான எளிமையான நூல் ஒன்றைக் கண்டெடுத்ததில் எனக்குப் பேரின்பம்!ஒரு அழகான மெல்லிய பூச்செடி நன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்ற சௌகரியங்களையும் செய்துவிட்டால் அது தானாகவே வளர்ந்து அதன் எழிலும் நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத் தருகின்றது. அதுபோலவேதான் பூங்குழந்தையும்.அதன் பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும். அனுதாபம் வேண்டும். அவற்றைவிட முக்கியமாக சுயேச்சை வேண்டும்.
Reviews
There are no reviews yet.