கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது
ரத்த சோகை உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
எலும்புகள் நமக்கு வயது ஏற, ஏற நமது உடலில் உள்ள எலும்புகளும், மூட்டு பகுதியிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும் ஆபத்து உள்ளது. கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
நீரிழிவு நோய் நீரிழிவு நோய் ஒரு கொடுமையான வியாதி ஆகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகள் நமது பண்டைய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சரும சம்பந்தமான வியாதிகள் பிரச்சனைகளைப் போக்க கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்கிறது.
காயங்கள், புண்கள் எதிர்பாராத விதமாக அடிபடுதல், விபத்து போன்றவற்றில் உடலில் காயங்கள், புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. சமயங்களில், உள்காயங்களும் உண்டாக்கிவிடுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.
இதயம் நமது இதயம் நன்றாக இருக்க நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
நரம்பு பிரச்சனைகள் இன்று பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை முறையே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் உடலில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக குழந்தைகள் அடிக்கடி ஏதாவது ஒரு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. எனவே இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடல் சக்தி இளம் வயதினரும் முதல் நடுத்தர வயதினர் வரை அதிகம் பேருக்கு உடல் மற்றும் மனம் எளிதில் சோர்ந்து விடுகிறது. இதற்கு உணவில் சரியான சத்துக்கள் இல்லாதது ஒரு காரணமாகும் உளுந்தில் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரக்கூடிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கருப்பு உளுந்து அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் உற்சாகம் அடைந்து, சக்தி அதிகரித்து நீண்ட நேரம் செயலாற்றக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.