முருங்கை விதை பல வியாதிகளை நெருங்க விடாது, முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.
கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும்.
தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரும்போது ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.உயிர்த்துகளின் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் வேகமும் அதிகரிக்கும்.
பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.
தூக்கமின்மை :
பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூட்டு வலி :
மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட் :
முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.
ரத்த அழுத்தம் :
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.
செல்லிறப்பு மற்றும் புற்று நோய் :
செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
இதய நலம் :
இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.
இயற்கையின் வயகரா
பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கை விதை பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு.
பொடியை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கை விதையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கை விதை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூ மற்றும் விதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன
Reviews
There are no reviews yet.