அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: நார்த்தங்காய், உப்பு ( சொந்த தோட்டத்தில் விளைகிறது )
பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமை பிரச்சினை வரவே வராது. சாப்பிட்டதும் ஏப்பம் வந்து கொண்டிருந்தாலும், ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன் கிட்டும். வயிற்றில் வாயுப் பிரச்சினை ஏற்படும் நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் வாயுக் கோளாறு விரைவில் நீங்கும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்துவர ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.
கிராமத்து வீடுகளில் வேப்பமரம், மாமரம், எலுமிச்சை மரம், கறிவேப்பிலை மரம் போன்றவற்றுடன் நார்த்தை மரமும் நிச்சயம் இருக்கும். உணவே மருந்து என்கிற உண்மையை உணர்ந்த போன தலைமுறை மக்களுக்கு நார்த்தையின் மருத்துவ மகத்துவம் தெரிந்திருந்தது. இன்று நார்த்தை என்றால் எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே சந்தேகம்தான்.
நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள். கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.