நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயறு வகைகளில் பச்சைப் பயறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் முளை கட்டிய பச்சைப் பயறு உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். இவற்றில் சோடியம் குறைவு.
இது கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.