ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 46 சதவீதம், ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. வைட்டமின் கே எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் வைட்டமின் கே தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.
பட்டாணியில், நார்ச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற நார்ச்சத்தின் அளவில் 36 சதவீதத்தை ஈடு செய்கிறது. பட்டாணி, நமது உடலில் அலர்ஜியை நெருங்கவிடாது. குறிப்பாக பைசம் சபோனின், பைசோமோசைடு ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளை நம்மிடம் நெருங்கவிடாது.
Reviews
There are no reviews yet.