ஆசிரியர்: பிரேம் ரமேஷ்
பக்கங்கள்: 120
வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக இசை வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுகள் ஏராளமாக உண்டு. அவைகளைத் தேடித் தேடி கவனம்செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள். நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர்
எழுத்தாளர் கி.ராஜநாராயணன்
ஒரு சினிமா இசையமைப்பாளராகவும் அதற்கு மேலும் ஏதோ ஒருத்தர் இளையராஜா என நான் நினைத்திருந்த எண்ணத்தை பிரேம்-ரமேஷின் கட்டுரை உடைத்தெறிந்தது. இந்தப் புத்தகத்தில் ஏதாவது சிறப்பு இருக்கிறதென்றால் அது பிரேம்&ரமேஷ் இருவரும் உருவாக்கியதனால் வந்ததுதான். எந்த ஒரு திரைப்படத்தின் பெயரையோ, ஒரு பாடலையோ குறிப்பிடாமல் இந்தப் புத்தகம் சிறப்புப் பெறுவதாக நினைக்கிறேன்.
இளையராஜா என்கிற ஒரு ஆள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும். இந்தக் கேள்வியை பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் கேட்டுவிட்டேன். பதிலே இல்லை.
இயக்குநர் தங்கர்பச்சான்
Reviews
There are no reviews yet.