”இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றறையும் உள்ளடக்கியது வெல்லம். இது, உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலுறுப்புகளையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலரும் உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு வெல்லத்தை வாயில் போடுகிறார்கள். செரிமான திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு. புரோட்டீன், தாதுச்சத்து, இரும்பு, கரோட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனைச் சத்துக்களும் இதில் இருக்கின்றன.
தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்பவர்களை, உணவில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லத்தை தாராளமாகச் சேர்க்கலாம். ஆஸ்துமாவுக்கும் இது அருமருந்து. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற உணவுகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு வேர்க் கடலை, உடைத்தக் கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்து கொடுக்கலாம். பழச்சாறு களில் சர்க்கரை சேர்த்தால்… கலோரி அதிகமாகும் அதற்குப் பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
குடற்புழுக்களைக் கட்டுப்படுத்த, அதிகாலையில் வெறும் வயிற்றில் வெல்லத்தை சாப்பிட்டாலே போதும். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதேநேரம் உடலுக்கு வலு சேர்க்க, என்ன இனிப்பு கொடுத்தாலும் அதில் வெல்லம் சேர்க்க வேண்டும்” என்றெல்லாம் பயனுள்ள தகவல்களைத் தந்தார். கூடவே சித்த மருத்துவர் சொக்கலிங்கம் சொன்ன எச்சரிக்கை தகவல்-
”இயற்கை முறை வெல்லத்தை உபயோகிப்பதன் மூலம் மட்டுமே மேற் சொன்ன முழுப்பலனும் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.”
Reviews
There are no reviews yet.