அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மாங்காய் வத்தல் தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: முற்றிய மாங்காய், மஞ்சள்தூள், உப்பு
பொதுவாக தமிழர்கள் பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.
மாவத்தல் கார குழம்பாகவும், வத்தல் குழம்பாகவும் சமைக்கலாம், வத்தல் குழம்பில் சேர்க்கும் மூலப் பொருட்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியதையும் செரிமான தன்மையும் அளிக்கும் பொருளாகவும். தமிழர்கள் வாழ்வில் வத்தல் குழம்பு இன்றியமையா உணவாகும்.
தற்சமயம் நாம் வாழும் அவசர உலகில் இது போன்ற உணவு பொருட்களை நாமே தயாரிக்க இயலாமல் கடைகளில் வேதியியல் கலந்த உணவு பொட்டலங்களை வாங்கி பயன்படுத்துகிறோம், அதன் பின் விளைவுகள் நம் ஆரோக்கியத்தை பாதிப்பதாக அமைகிறது, அதன் பொருட்டு தான் தைத்திங்கள் நிறுவனம் உணவு பொருட்கள் தயாரிக்கும் பணியில் நேரடி களமிறங்கி உள்ளது, முழுவதும் இயற்கையான முறையில் அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரித்து வழங்க முனைந்துள்ளோம். அம்மாவின் அக்கறையும் நேசமும் உங்கள் உணவிலும் இனி தவழும்.
உலகமெங்கும் பரவியுள்ள தைத்திங்கள் நிறுவனம் உலகம் எந்த மூலைக்கும் தன் தயாரிப்புகளை அனுப்பி வைக்கிறது.
மேலும் மாவத்தல் குழம்பு வைக்கும் முறையையும் கீழே குறிப்பிட்டுள்ளோம், பயன்பெறவும்.
தேவையான பொருட்கள்:
மாவத்தல், மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம், புளி, சாம்பார் பொடி, உப்பு
புளியை ஊறவைத்துக் கொள்ளவும், கத்தரி வத்தலை வெந்நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
மிளகு சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு வெடித்ததும் இரண்டு மூன்று உரித்த பூண்டு பற்களை போட்டு வதக்கவும், மேலும் ஊறவைத்த மாவத்தலை போட்டு நன்கு வதக்கவும் பின்பு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும் எண்ணெய் மேலே வரும் வரை நன்கு கொதிக்கவேண்டும். அதில் மிளகு சீரகப்பொடியையும் சாம்பார் பொடியையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதிநிலை வந்தவுடம் இறக்கி விடவும்.
ஆரோக்கியமான மாவத்தல் குழம்பு தாயார்.
Reviews
There are no reviews yet.