கம்பு உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். கால்சியம், மக்னீசியம், அயன் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சாதம் போல் சமைத்து உண்ணலாம். மாவாக அரைத்து காஞ்சி வைத்து அருந்தலாம். குருணையாக செய்து வேகவைத்து மோருடன் கலந்து கூழாக செய்து சாப்பிடலாம்.
இரவில் அதிக நேரம் தூங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்
சோர்வு நீங்கி புத்துணர்வு பெற :மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
உடல் பலம் பெற :
உடல் பலம் பெற கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
கம்பு உணவுகள் இதயத்தை வலுவாக்குவதோடு, நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். மேலும் இரத்தம் சுத்தமாக்கும்.
அஜீரணக் கோளாறு குணமாக :
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
Reviews
There are no reviews yet.