ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா
பக்கம்: 196
ஒரு கிராமத்துச் சிறுமி கேட்ட விடுகதை, இயற்கையை நோக்கி என்னை இழுத்துவந்தது. ஆனால், வாழ்கிற மண்ணில் நஞ்சைத் தெளிப்பது தாயே தனது பிள்ளைக்கு நஞ்சு அளிப்பதைப்போல என நினைத்து, ஒரு விவசாயி அடைந்த பதட்டத்தைப் போக்கும் வழிமுறை என்னிடம் இல்லாமல் இருந்தது. காந்தி ஆசிரமத்திலிருந்து வந்திருந்த நண்பர் என் கைகளுக்குள் அழுத்தித்தந்த ஒரு புத்தகம் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி”. அதன்வழியே எனக்குக் கிடைத்த ஆசான்தான் ‘மசானபு ஃபுகோகா’. விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் துவங்கி இம்மலையுச்சி மரத்தடியில் என்னோடு அமர்ந்திருக்கும் உங்கள் வரைக்கும் நான் பகிர்ந்துகொள்கிற அனைத்தும் அந்த மனிதனின் அனுபவ உண்மைகளே. குற்றங்களிலிருந்து தனிமனிதன் தன்னை சரிசெய்துகொள்ள காந்தியின் ‘சத்திய சோதனை” புத்தகம் எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோல இயற்கையிடம் சரணடைதலுக்கான பெரும்பாதை ஃபுகோகாவின் புத்தகங்கள். கோ. நம்மாழ்வார்
Reviews
There are no reviews yet.