ஆசிரியர்: கோ.வசந்தகுமாரன்
பக்கங்கள்: 230
இது தேர்ந்த வாசகனுக்கோ அல்லது பூடகக் கவிஞர்களுக்கான தொகுப்போ இல்லை. சதா அலைவுறும் காதல் மனது ஒருபுறமென்றால், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் இச்சமூகச் சூழல் ஒருபுறமென என தொகுப்பு முழுதும், விரவிக்கிடக்கும் வலியும்கூட ரசனை மிகுந்தே வெளிபடுகிறது. உதாரணத்திற்கு இக்கவிதையைச் சொல்வேன். “எனது ஊரில் கவிதை எழுதும் என்னை யாருக்கும் தெரியாது. ஆடை கிழித்து ஆண்குறி விரைக்கத் திரியும் ஒரு பைத்தியக்காரன் படு பிரசித்தம்” ஆம். இன்றைய பிரபலங்கள் இப்படி தங்களின் பைத்தியக்காரத்தனங்களால்தான் தங்களை தனித்துவப் படுத்திக் கொள்கிறார்கள்.
” றெக்கையில்லாவிட்டால்
என்ன?
இன்னொரு கிரகத்திலிருந்து
பார்க்கிறவனுக்கு
நீ வானத்தில் இருப்பாய்.”
பூமியில் இருந்தால் வானத்தில்
இல்லை என்கிற பொதுக்
கருத்தைத் தூள் தூளாக
உடைத்துப் போடுகிறது
கோ.வசந்தகுமாரன்
கவிதை. – இந்திரன்
Reviews
There are no reviews yet.