ஆசிரியர்: க. ப. அறவாணன்
பக்கங்கள்: 336
நம்மை சிறைப் படுத்தி வைத்திருக்கும் அடிமை விலங்குகள் பொடி படட்டும்!
தரம் தாழ் மனப் போக்கால் தமிழர் இழந்தன ஏராளம். மற்றவரால் பொருட்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் பல. மிக முதன்மையாகச் சுட்டத்தக்கவை, திருவள்ளுவர் வாழ்ந்த கடற்கரைக்குத் திருவள்ளுவர் பெயர் வைக்காமல் வங்காள விரிகுடா எனப் பெயர் வைத்தமை. சேரத் தமிழர் வாழும் கடற்கரைக்கு அரபிப் பெருங்கடல் என்று வைத்தது . 1947 ல் விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்த இந்தியா அரசு தமிழ்நாட்டின் பரம்பரை வட எல்லைப் பகுதியான திருப்பதியை அப்படியே ஆந்திரரிடம் தூக்கிக் கொடுத்தது: தொல் காப்பியர் காலம் முதல் தென் எல்லையாக இருந்த குமரி மாவட்டத்தைக் கேரளப் பகுதியோடு இணைத்தது. தமிழரிடம் இருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாமல் இவை நிகழ்ந்திருக்கின்றன. பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்பதற்காக இந்தியை மைய அரசின் ஆட்சி மொழி ஆக்கியோர், தமிழ் பெரும்பான்மையாக பேசப்படும் புதுவை மாநிலத்தில் ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்கவில்லை.
இப்படி பல புறக்கணிப்புகள் தமிழையும் தமிழரையும் புறக்கணிக்க முடியும் என்பதற்கு அண்மைச் சான்றுதான் ஈழத்தில் தமிழ் இயக்கம் ஒழிக்கப்பட்டதும், தமிழர் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டதும் ஆகும்.
இனியும் இது போன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் கடந்தகால உலக வரலாற்றுப் பக்கங்கள் புரட்டப்பட்டுத் தமிழர் அடிமை ஆனதற்கான காரணங்கள் இந்நூலில் அலசப்பட்டுள்ளன. இதன் அருமை கருதி தினத்தந்தி நாளேடு தமிழர் தந்தை சி பா ஆதித்தனார் பெயரில் உள்ள சிறந்த நூல் பரிசை வழங்கிப் பெருமைப்படுத்தியது ( 1999 )
- க. ப. அறவாணன்
Reviews
There are no reviews yet.