“சோளப்பொரி (பாப்கார்ன்) செய்யும் முறை
தேவையான பொருள்கள்:
காய்ந்த சோளம் – ஒரு கைப்பிடி
எண்ணெய் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோளத்தை சட்டியிலிட்டு லேசாக வறுக்க வேண்டும்.
பின்னர் வறுக்கப்பட்ட சோளத்தை பிரஷர் குக்கரில் இட்டு அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் தூவி குக்கரை வெயிட் போடாமல் மூடி அடுப்பை குறைந்த நெருப்பில் (சிம்) வைக்க வேண்டும்.
சற்று நேரத்தில் சோளம் நன்றாக வெடிக்கும் சத்தம் கேட்கும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பிரஷர் குக்கரில் உள்ள சோளப்பொரியை ஒரு பெரிய பத்திரத்தில் இட்டு தேவையான அளவு உப்புத்தூள், தேவைக்கு மிளகாய்த்தூள் தூவி மிக்ஸ் செய்தால் சுவையான பாப்கார்ன் தயார்
Reviews
There are no reviews yet.