தேவையே நமது நகர்வுகளை, நமது முன்னெடுப்புகளை தீர்மானிக்கிறது. ஒரு நிலத்தின் அரசியல் தேவை தான் அந்நிலத்தின் படைப்புகளின் தேவையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தமிழர் நிலத்தின் தற்போதைய அரசியல் தேவையாக தமிழர்தேசியம் இருக்கிறது. அத்தேவையின் பொருட்டே பொறியாளர் அண்ணன் .அர. குமரேசன் அவர்களால் “யார் தமிழர்?” என்ற இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அத்தேவையின் பொருட்டே தமிழர்தேசிய படைப்புகளை ஊக்குவித்து பதிப்பித்து வெளியிட ஆவல்கொண்டிருக்கும் எங்கள் தைத்திங்கள் பதிப்பகம் இந்நூலை பதிப்பிக்க கடமைப்பட்டுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் சுந்தரசோழபுரத்தை பூர்வீகமாக கொண்ட பொறியாளர் அண்ணன் அர. குமரேசன் அவர்கள் பண்பான தமிழ்தேசிய சிந்தனையாளர். சிறந்த தமிழ்தேசிய செயல்பாட்டாளர். பொறியாளர் அர. குமரேசன் இந்நூலை தமிழர்களுக்கான ஒரு பொறியாக வைத்துள்ளார். இந்த பொறி சிக்கவைக்கும் பொறியல்ல, அந்நிய மோகத்திலும், திரை மோகத்திலும், மது போதையிலும் சிக்கியிருக்கும் தமிழர்களின் விடுதலைக்கான பொறி.
“யார் தமிழர்?” என்ற இந்நூல் யார் தமிழர் என்பதை தெளிவாக பேசியிருக்கிறது. தமிழ் தேசியவாதிகளிடம் பெரும்பாலும் ஊடகங்கள் கேட்கும் யார் தமிழர்? என்ற கேள்விக்கான பதில் அல்ல இது. அயலார்கள் தமிழ்தேசியவாதிகளிடம் கேட்கும் யார் தமிழர்? என்ற கேள்விக்கான பதில் அல்ல இது. மாறாக தமிழர்கள் ஒவ்வொருவரும் யார் தமிழர்? என்ற புரிதலை அடைவதற்கான நூலாக இந்நூல் உள்ளது சிறப்பு. தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணர்ந்துவிட்டால் யார் தமிழர்? என்ற அடுத்தவர் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அர. குமரேசன் அவர்களுடைய கனவுத் தமிழ்நாடு தான் தைத்திங்கள் பதிப்பகத்தினுடைய கனவுத் தமிழ்நாடும். தமிழர்களின் கனவுகள் மெய்படட்டும். தமிழர்களின் கனவுத் தமிழ்நாடு வளம்பெரட்டும்.
பொறியாளரின் இந்நூலை படித்தால் மழுங்கடிக்கபட்டிருக்கும் தமிழர்களின் தலையில் விடுதலைப் பொறித்தட்டும்.
Reviews
There are no reviews yet.