ஆசிரியர்: கே.பாக்யராஜ்
பக்கங்கள்: 400
சிறந்த திரைக்கதையாசிரியரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஏற்கனவே ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிட்ட ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்ற நூல்மூலம் தமிழ்த் திரையுலக இயக்குநர்களுக்கு திரைக்கதையின் ரகசியங்களை வெளிப்படுத்தியவர். இப்போது ’நீங்க நினைச்சா சாதிக்கலாம்’ என்ற இந்த நூல் மூலம் நாம் நினைத்ததை எப்படி வெற்றிகரமாக அடையலாம் என்ற ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மேஜிக் நிபுணனைப் போல தற்காலிக ஆச்சரியத்தால் திகைக்க வைக்காமல், ஒரு ஆசிரியரைப்போல தனது அனுபவங்களைச் சொல்லி, நாம் நினைத்ததை அடையும்படி வெற்றிக்கு தூண்டுவதுதான் இந்நூலின் தனித்தன்மை.
– மு. வேடியப்பன், பதிப்பாளார்.
Reviews
There are no reviews yet.