மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன.
நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது.
உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது.
நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.
சிவப்பு கவுனி அரிசி
சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
ஆஸ்துமாவை தடுக்கும்
உடலில் ஆக்ஸிஜன் மேம்படும்
செரிமானத்திற்கு உதவும்
இதய நோயில் இருந்து பாதுகாக்கும்
எடை இழப்பிற்கு உதவும்
எலும்புகளுக்கு நல்லது
மண் கட்டிய துவரம் பருப்பு
- மண் கட்டிய துவரம் பருப்பு : துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும். மண்கட்டும் வேளாண் நுட்பம் : இந்த மண்கட்டுதல் என்பது மிகவும் தொண்மையான வேளாண் நுட்பம், இதற்கு மற்றொரு பெயரும் உண்டு செம்மல் கட்டுதல்.. இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,. இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும் அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும் பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும் உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை அளிக்கும்.
மூலிகை கொசு விரட்டி
அளவு: 45 மில்லி
அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும்.
கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
- 100% இயற்கையானது
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
- ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
- கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
- இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
நீர் குருவி #828
சீரக சம்பா அரிசி
- சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம்(Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனித்துவம் (Speciality): “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும். இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani)செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது. சீரகச் சம்பா பயன்கள்(Benefits): எளிதாக செரிப்பதோடு(Easily Digestable), இரைப்பை(Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது. வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும். குடல்புண்(Ulcer), வயிற்றுப்புண்(Severe),வாய்ப்புண்(Mouth ulcer) குணமாகும். கண் நரம்புகளுக்கு(Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை(Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
தூயமல்லி அரிசி
தூயமல்லி பயன்கள்
மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது.
இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது.
அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது,
பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்
இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.